Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19 கிருமிப்பரவலுக்குத் தயாராகும் அமெரிக்கா

COVID-19 கிருமித்தொற்றையொட்டி, மாநில அரசாங்கங்கள், வர்த்தகங்கள், பள்ளிகள் ஆகியவற்றை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறு அமெரிக்கச் சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வாசிப்புநேரம் -

COVID-19 கிருமித்தொற்றையொட்டி, மாநில அரசாங்கங்கள், வர்த்தகங்கள், பள்ளிகள் ஆகியவற்றை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறு அமெரிக்கச் சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கிருமித்தொற்று அமெரிக்காவில் பரவலாம் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதைக் கருத்திற்கொண்டு, மக்கள் ஒன்றாகக் கூடுவதைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மக்கள் ஒன்றாகக் கூடவேண்டிய நிகழ்ச்சிகளை ரத்து செய்யவும்;

மாணவர்களும் ஊழியர்களும் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு ஏற்பாடு செய்யும்படியும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருமித்தொற்று அமெரிக்காவில் பரவுமா என்பது கேள்வி இல்லை என்றும், அது எப்போது பரவும் என்பதுதான் கேள்வி என்றும் அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையம் கூறியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்