Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19: அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ள நோய்ப்பரவல்

COVID-19: அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ள நோய்ப்பரவல்

வாசிப்புநேரம் -
COVID-19: அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ள நோய்ப்பரவல்

(படம்: CNA)

அமெரிக்காவில் மேற்கு, தெற்கு வட்டாரங்களில் COVID-19 நோய்ப் பரவலுக்கு ஆளானோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

அதையடுத்து, பாதுகாப்பு கட்டுப்பாடுகளை முதன்முதலாக தளர்த்திய ஒருசில மாநிலங்கள், மீண்டும் அவற்றை நடப்புக்குக் கொண்டு வரத் தொடங்கியுள்ளன.

ஃபுளோரிடா மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவாக சுமார் 10,000 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரிஸோனா மாநிலத்தில் நோய்த்தொற்றுச் சம்பவங்கள் மீண்டும் 3,500 என்ற உச்சத்தைத் தொட்டன.

இதற்குமுன் அங்கு அதே எண்ணிக்கையில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின.

டெக்ஸஸ் மாநிலத்தில் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்