Images
  • America Shutdown
    (படம்: AFP Photo)

COVID-19: அமெரிக்காவில் 1.8 டிரில்லியன் டாலர் பொருளியல் நிவாரண நிதித் திட்டம்

அமெரிக்க செனட் சபை, 1.8 டிரில்லியன் டாலர் மதிப்புமிக்க பொருளியல் நிவாரண நிதித் திட்டத்தை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

விரைவில் அந்தத் தொகுப்புத் திட்டத்தை அறிமுகம் செய்ய அதிபர் டோனட்ல் டிரம்ப்பும் இணங்கியுள்ளார்.

COVID-19 கிருமிப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்குக் கைகொடுக்க அந்த நிதி பயன்படுத்தப்படும்.

அது ஒரு போர்க் கால முதலீடு என்று செனட் சபையின் குடியரசுக் கட்சித் தலைவர் மிட்ச் மக்கொனல் (Mitch McConnell) கூறியுள்ளார்.

நிவாரண நிதித் திட்டத்தின் மூலம் உலக அளவிலான நிதிச் சந்தைகள் மேம்படும் என்று நம்பப்படுகிறது. 

Top