Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கா: காட்டுத் தீயில் 1.6 மில்லியன் ஹெக்டர் பரப்பளவு சேதம்

அமெரிக்காவின் ஆரெகன், கலிஃபோர்னியா, வாஷிங்டன் ஆகிய மாநிலங்களில் கடுமையாக எரிந்துவரும் காட்டுத்தீயால் 1.6 மில்லியன் ஹெக்டர் (16,000 சதுர கிலோமீட்டர்) பரப்பளவு சேதமடைந்துள்ளது.

வாசிப்புநேரம் -
அமெரிக்கா: காட்டுத் தீயில் 1.6 மில்லியன் ஹெக்டர் பரப்பளவு சேதம்

(படம்: REUTERS/Karen Ducey)

அமெரிக்காவின் ஆரெகன், கலிஃபோர்னியா, வாஷிங்டன் ஆகிய மாநிலங்களில் கடுமையாக எரிந்துவரும் காட்டுத்தீயால் 1.6 மில்லியன் ஹெக்டர் (16,000 சதுர கிலோமீட்டர்) பரப்பளவு சேதமடைந்துள்ளது.

ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் மூண்ட தீயில் ஆயிரக்கணக்கான வீடுகள் கருகின.

குறைந்தது 33 பேராவது தீக்குப் பலியானதாகத் தெரிவித்த அதிகாரிகள்,
மாண்டோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சுகின்றனர்.

கிட்டத்தட்ட 17,000க்கும் அதிகமான தீயணைப்பாளர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர போராடிவருகின்றனர்.

காட்டுத்தீ காரணமாக அடர்ந்த புகையும் சாம்பலும் காற்றின் தரத்தைக் கடுமையாகப் பாதித்திருக்கிறது.

இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப், கலிஃபோர்னியா மாநிலப்
பாதிப்புகளை நேரில் சென்றுப் பார்த்தார்.

பருவநிலை மாற்றம் குறித்து பேசிய அவர், கட்டுத்தீ நிலவரம் மோசமடைந்ததற்கு மாநில ஆளுநர்களும் காரணம் என்று குறிப்பிட்டார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்