Images
  • police us
    (கோப்புப்படம்: REUTERS)

டிரம்ப் கொரோனா கிருமிப்பரவலுக்குச் சீனாவைக் குறைகூறியதால் அமெரிக்காவில் ஆசியர்களுக்கெதிரான வெறுப்பு அதிகரித்திருக்கலாம்...

அமெரிக்காவில் ஆசிய அமெரிக்கர்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் கடந்த ஓராண்டில் கணிசமாய் அதிகரித்துள்ளதாக ஆய்வு காட்டுகிறது.

ஒரே ஆண்டில், அப்படிப்பட்ட குற்றச்செயல்கள் சுமார் 150 விழுக்காடு அதிகரித்துள்ளன.

அமெரிக்காவில் உள்ள "வெறுப்பு, தீவிரவாதம்" குறித்து ஆய்வு நடத்தும் நிலையம் அந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபர் திரு டோனல்ட் டிரம்ப், கொரோனா கிருமிப்பரவலுக்கு சீனாவைக் குறைகூறியதைத் தொடர்ந்து
வெறுப்பின் காரணமாய் நேரும் குற்றச்செயல்கள் அதிகரித்தன.  

Top