Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மனைவியுடன் சண்டை... விமானத்தை வீட்டில் மோதிய அமெரிக்கர் மரணம்

தேசியப் போக்குவரத்து ஆணையம் சம்பவத்தின் தொடர்பில் விசாரணை நடத்துகிறது. ஒரு வாரத்தில் அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

வாசிப்புநேரம் -
மனைவியுடன் சண்டை... விமானத்தை வீட்டில் மோதிய அமெரிக்கர் மரணம்

(படம்:Reuters)

வீட்டில் கணவருக்கும் மனைவிக்கும் சண்டை என்றால் அது விபரீதத்தில் போய் முடிவதும் உண்டு.

அமெரிக்காவில் ஒருவர் விமானத்தைச் சொந்த வீட்டின்மீது மோதியிருக்கிறார்.

உட்டா மாநிலத்தைச் சேர்ந்த டுவான் யூத் (Duane Youd) மனைவியுடனான சர்ச்சையின் காரணமாகக் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

விடுதலையாகி வந்தவர், தான் பணிபுரிந்த ஸ்பானிய ஃபோர்க் விமான நிலையத்திலிருந்து சிறிய விமானத்தைத் திருடியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

பகல் இரண்டரை மணியளவில் பேசன் நகரில் உள்ள தனது வீட்டை நோக்கி விமானத்தைச் செலுத்தியிருக்கிறார் யூத்.

விமானம் வீட்டின்மேல் விழுந்ததில் யூத் சம்பவ இடத்திலேயே மாண்டார்.

அவரின் மனைவியும் 17 வயது மகனும் வீட்டிலிருந்து பாதுகாப்பாய் வெளியேறியதாக அதிகாரிகள் கூறினர்.

தந்தையின் இறுதி வார்த்தைகள் தொடர்ந்து காதில் ஒலிப்பதாகச் சொன்னார் மகன் பார்க்கர்.

மகனிடம் அன்பை வெளிப்படுத்திய யூத்

நாளை உன்னைச் சந்திக்கிறேன்

எனக் கூறிவிட்டு கனரக வாகனத்தில் சென்றுள்ளார்.

வீடு பற்றியெரியும் காட்சிகள் சமூக ஊடகத்தில் பரவுகின்றன.

(படம்:Reuters)



 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்