Images
  • Web attack

ஊழியர்களின் விவரங்கள் ஊடுருவப்பட்ட இணையத் தாக்குதல் குறித்து விசாரணை: அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு

அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு தனது பல்லாயிரம் ஊழியர்களின் தனிப்பட்ட விவரங்கள் ஊடுருவப்பட்ட இணையத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

ஊடுருவல் நிகழ்ந்திருப்பதாகவும் அது குறித்து அக்டோபர் 4ஆம் தேதி இராணுவத் தலைமைத்துவத்துக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

இணையத் தாக்குதலில் இருந்து முக்கிய ஆயுத முறைகளைப் பாதுகாப்பதில் தற்காப்பு அமைச்சு மெதுவாகச் செயல்படுவதாய் இவ்வாரத் தொடக்கத்தில் அமெரிக்க அரசாங்கம் வெளியிட்ட அறிக்கை சொல்லிற்று.

இணையப் பாதுகாப்பு குறித்த அக்கறை அமெரிக்க இராணுவ, உளவுத்துறை அதிகாரிகளிடையே அதிகரித்துள்ளது.

Top