Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கா: மூன்று மாதங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட பெண் உயிருடன் மீட்பு

அமெரிக்காவின் விஸ்கோன்சின் மாநிலத்தில் மூன்று மாதங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட பதின்ம வயதுப் பெண் ஜேய்மி குலோஸ் (Jayme Closs) நேற்று (ஜனவரி 11) காவல்துறையால் மீட்கப்பட்டார்.

வாசிப்புநேரம் -
அமெரிக்கா: மூன்று மாதங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட பெண் உயிருடன் மீட்பு

( படம்: HO/Barron County Sheriff's Department/AFP)

அமெரிக்காவின் விஸ்கோன்சின் மாநிலத்தில் மூன்று மாதங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட பதின்ம வயதுப் பெண் ஜேய்மி குலோஸ் (Jayme Closs) நேற்று (ஜனவரி 11) காவல்துறையால் மீட்கப்பட்டார்.

ஜேய்மியைக் கடத்தி, அவரது பெற்றோரைக் கொன்றதன் தொடர்பில் 21 வயது ஆடவர் ஜேக் தாமஸ் (Jake Thomas) மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜேய்மியின்
பெற்றோர் அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு மாண்டுகிடந்தனர்.

அதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் விழிப்பு நிலை அறிவிக்கப்பட்டது.

நகரை விட்டு 120 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஒரு வீட்டில் அந்த ஆடவர் ஜேய்மியை 88 நாள்களாக அடைத்து வைத்திருந்தார். அங்கிருந்து தப்பிய ஜேய்மி காவல்துறை அதிகாரிகளிடம் தஞ்சம் அடைந்தார்.

அதைத் தொடர்ந்து ஜேக் தாமஸ் அந்த வீட்டில் கைது செய்யப்பட்டார்.

ஜேக் திட்டமிட்டு கொலையையும், கடத்தலையும் செய்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

தற்போது ஜேய்மி நல்ல உடல்நிலையில் இருப்பதாகவும் அவரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்