Images
  • tooth
    படம்: AFP/Handout

காணாமற்போன உலகில் வாழ்ந்த ஆகப் பெரிய சுறா மீனுடைய ராட்சதப் பல்லின் தொல்படிமம்

உலகில் வாழ்ந்த ஆகப் பெரிய, ஆகச் சக்திவாய்ந்த மீன்களில் ஒன்றாகக் கருதப்படும் Megalodon சுறா மீனுடைய ராட்சதப் பல்லின் தொல்படிமம் காணாமற்போய்விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைதூர ஆஸ்திரேலிய உலக மரபுடைமைத் தலத்தில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அந்தப் பல்லின் தொல்படிமம் காணாமற்போனது.

அது 2 மில்லியனிலிருந்து 2.5 மில்லியன் ஆண்டு வரை பழமை வாய்ந்ததாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

மேலும், இந்தத் தொல்படிமங்கள் இருக்கும் இடத்தைப் பற்றி வெகு சிலருக்கே தகவல் தெரியும் என்று சொல்லப்படுகிறது.

சுமார் 10 செண்டிமீட்டர் நீளம் கொண்ட தொல்படிமத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க அது கற்களால் மூடி மறைக்கப்பட்டது. அதனை நெடுங்காலத்திற்கு பேணிக்காப்பது பற்றி ஆராயப்பட்டது.

தொலைவில் வைக்கப்பட்டிருந்த அந்தத் தொல்படிமத்தைத் தினந்தோறும் சரிபார்க்க முடிவதில்லை என்பதால் அது எப்போது காணாமற்போனது என்று சரியாகத் தெரியவில்லை.

தொல்படிமங்களைச் சேகரிக்கும் ஒருவர் அதனை எடுத்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

15 மீட்டர் நீளம் வரை வளரக்கூடிய Megalodon சுறா மீன், 1.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துபோனதாக நம்பப்படுகிறது.


Top