Images
  • Angry Parent
    (படம்: Pixabay)

ஸ்காட்லந்து: பிள்ளைகளை அடிப்பது குற்றமாகலாம்


ஸ்காட்லந்தில் பிள்ளைகளைப் பெற்றோர் அடிப்பதைக் குற்றமாக வகைசெய்யும் சட்டம் அமல்படுத்தப்படக்கூடும்.

அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அதுபற்றிய வாக்களிப்பு இன்று (அக்டோபர் 3) இடம்பெறும் என BBC தெரிவித்துள்ளது.

குறும்புக்காரப் பிள்ளைகளைத் தற்போது பெற்றோர் அதிக பலத்தைப் பயன்படுத்தாமல் அடிக்கலாம்.

ஆனால் புதிய சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அது இனி தடைசெய்யப்படும்.

கருத்துக்கணிப்புப்படி புதிய சட்டம் நடப்புக்கு வந்தால் அது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தலாம்.

ஆனால் ஸ்காட்லந்து அரசாங்கத்திடமிருந்தும் சிறுவர் நலச் சங்கங்களிடையேயும் புதிய சட்டத்துக்குப் பேராதரவு கிடைத்துள்ளது.

 

Top