Images
  • china flag
    (படம்: AFP)

'சீனாவுக்கு எதிராகச் செயல்படுவோர் பெய்ச்சிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பிரச்சினை உண்டாக்க முயல்கின்றனர்'

சீனாவுக்கு எதிராக செயல்படுவோர், அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள பெய்ச்சிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பிரச்சினை உண்டாக்க முயல்வதாக Global Times எனும் சீன சஞ்சிகை குற்றஞ்சாட்டியுள்ளது.

சீனாவைப் பற்றிய தவறான எண்ணங்கள் குறித்து, சிலரின் நிலையை மாற்றிக்கொள்ள முயல்வது வீணானது என்றும் Global Times குறிப்பிட்டது.

எனினும், சீனாவுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான கொள்கை வேறுபாடுகள் மேலும் அதிகரிக்கலாம் என Global Times ஊகித்துள்ளது.

அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள பெய்ச்சிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் அத்தகைய வேறுபாடுகள் கடுமையாகி சீனாவுக்குப் பிரச்சினைகளை உண்டாக்கலாம் என்றும் Global Times சொன்னது.

இவ்வேளையில், பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகள், சீனாவில் இடம்பெறுவதாகச் சொல்லப்படும் மனித உரிமை மீறல்களைச் சாடியுள்ளன.

பெய்ச்சிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் அரசதந்திர அடிப்படையில் கலந்துகொள்ளாமல் இருப்பது குறித்து பரிசீலிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சென்ற வாரம் தெரிவித்திருந்தார்.  

Top