Images
  • Trump rally
    படம்: AFP

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு எதிராக ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்ட பேரணி

அமெரிக்காவில் அதிபர் டோனல்ட் டிரம்ப்பிற்கு எதிராக அந்நாட்டுப் பெண்கள் நடத்திய பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக சர்ச்சைக்குரிய நபரைத் திரு. டிரம்ப் தெரிவு செய்ததை எதிர்த்தும் பெண்கள் குரலெழுப்பினர்.

சுமார் 430 இடங்களில் நடந்த பேரணிகளில் 100,000-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

கொரோனா கிருமிப்பரவல் சூழலால் பேரணியில் குறைவான எண்ணிக்கையிலேயே் மக்கள் கூடுவர் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 3ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

தற்போது நடைபெற்ற இந்தப் பேரணி அதிபர் டிரம்ப்பின் தேர்தல் வெற்றிக்கு மேலும் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர். 

Top