Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கால்நடைகளுக்கு நோய் எதிர்ப்பு மருந்து கொடுக்கும் பழக்கம் எச்சரிக்கையை மீறி 45 நாடுகளில் தொடர்கிறது

லண்டன்: உலக விலங்கு சுகாதார அமைப்பின் எச்சரிக்கையையும் மீறி சுமார் 45 நாடுகளில் கால்நடைகளுக்கு நோய் எதிர்ப்பு மருந்து கொடுக்கப்பட்டு அவற்றின் எடை அதிகரிக்கப்படுகிறது.

வாசிப்புநேரம் -
கால்நடைகளுக்கு நோய் எதிர்ப்பு மருந்து கொடுக்கும் பழக்கம் எச்சரிக்கையை மீறி 45 நாடுகளில் தொடர்கிறது

(படம்: AFP/Peter Parks)

லண்டன்: உலக விலங்கு சுகாதார அமைப்பின் எச்சரிக்கையையும் மீறி சுமார் 45 நாடுகளில் கால்நடைகளுக்கு நோய் எதிர்ப்பு மருந்து கொடுக்கப்பட்டு அவற்றின் எடை அதிகரிக்கப்படுகிறது.

அவற்றில் 14 நாடுகள் ஆசியாவைச் சேர்ந்தவை.

155 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் 45 நாடுகளைச் சேர்ந்த பண்ணையாளைர்கள் நோய் எதிர்ப்பு மருந்துகளைப் பயன்படுத்துவது தெரியவந்தது.

விலங்குகளுக்குத் தொற்றுநோய் ஏற்படாமல் தடுப்பதற்காகவும், அவற்றின் எடையைக் கூட்டுவதற்காகவும் அவர்கள் அவ்வாறு செய்கின்றனர்.

அதனால், விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் பயன்படுத்தப்படும் முக்கியமான சில வகை மருந்துகள், செயலிழந்து போகும் ஆபத்து உருவாகிறது.

அத்தகைய கால்நடைகளின் பாலையும் இறைச்சியையும் உட்கொள்ளும் மனிதர்களிடம், மருந்துக்குக் கட்டுப்படாத superbug என்னும் வீரியமிக்க கிருமியால் ஏற்படும் தொற்று உருவாகக் கூடும்.

அதனால் அத்தகைய மருந்துகளை ஆரோக்கியமான கால்நடைகளிடம் பயன்படுத்துவது, ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

கால்நடைகளுக்குக் கொடுக்கப்படும் Colistin, கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும் மருந்து வகையைச் சேர்ந்தது.

தடைகளின் காரணமாக சில நாடுகளில் கிருமிப் பரவல் விகிதம் குறைந்துள்ளபோதும் இன்னும் அதிக விழிப்புணர்வு தேவையென்று உலக விலங்கு சுகாதார அமைப்பின் அறிக்கை குறிப்பிட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்