Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVAX திட்டத்தில் APEC உறுப்பு நாடுகள் சேர வேண்டும்: பிரதமர் லீ

APEC உறுப்பு நாடுகள், COVID-19 தடுப்பு மருந்தைத் தயாரித்து, விநியோகிப்பது தொடர்பில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவேண்டும் என்று பிரதமர் லீ சியென் லூங் கேட்டுக்கொண்டுள்ளார்.

வாசிப்புநேரம் -

APEC உறுப்பு நாடுகள், COVID-19 தடுப்பு மருந்தைத் தயாரித்து, விநியோகிப்பது தொடர்பில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவேண்டும் என்று பிரதமர் லீ சியென் லூங் கேட்டுக்கொண்டுள்ளார்.

அனைத்து நாடுகளுக்கும் தடுப்பு மருந்து கிடைப்பதை உறுதிசெய்யும் COVAX திட்டத்தில் சேரும்படி APEC நாடுகளிடம் அவர் வலியுறுத்தினார்.

கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தி, பொருளியல் மீட்சிகாண உதவும் 3 அம்சங்களில் அதுவும் ஒன்று.

போக்குவரத்தையும், சரக்கு விநியோகத்தையும் மீண்டும் தொடங்குவதன் தொடர்பிலும் 21 உறுப்பு நாடுகளும் இணைந்து பணியாற்றவேண்டும் என்று திரு. லீ பரிந்துரைத்தார்.

மின்னிலக்க வர்த்தக விதிமுறைகளைப் பொருத்தமாக அமைத்தல் அதற்கு உதவும்.

மூன்றாவதாக, உறுப்பு நாடுகள் அனைத்தையும் உள்ளடக்கிய பொருளியல் மேம்பாட்டுக்கு APEC அமைப்பு ஆதரவுதர வேண்டும் என்றும் பிரதமர் லீ வலியுறுத்தினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்