Images
  • DT Apec
    படம்: AFP / MOHD RASFAN

APEC உச்சநிலை மாநாட்டில் முதல்முறையாகப் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நேற்று APEC உச்சநிலை மாநாட்டில் பங்கேற்றது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

2017ஆம் ஆண்டிலிருந்து அந்த வருடாந்தர மாநாட்டை அவர் புறக்கணித்துவந்தார்.

காணொளி மூலம் நடந்த மாநாட்டில் மற்ற நாடுகளின் தலைவர்கள் பேசும்போது அவர்களது கணினித் திரையில், APEC மாநாட்டைக் குறிக்கும் பின்னணி அமைக்கப்பட்டிருந்தது.

ஆனால் திரு. டிரம்ப் பேசும்போது அமெரிக்க அதிபரின் முத்திரையைக் காட்டும் பின்னணி அமைக்கப்பட்டிருந்தது. அவர் தமது திரையில் APEC பின்னணியைப் பயன்படுத்த மறுத்துவிட்டதாக மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

கிருமிப்பரவலில் இருந்து அமெரிக்கப் பொருளியலை மீட்பதற்கான கடப்பாட்டைத் திரு. டிரம்ப் மாநாட்டில் உறுதிப்படுத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது. இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் அமைதி, வளப்பம் ஆகியவற்றை மேம்படுத்தவும் அவர் விருப்பம் தெரிவித்ததாக அது குறிப்பிட்டது.

Top