Images
  • sg covid cbd
    (கோப்புப் படம்: AFP/Roslan Rahman)

APEC உச்சநிலைச் சந்திப்பு: தடையற்ற, பலதரப்பு வர்த்தக உறவு வலுப்பெறும் என்று எதிர்பார்ப்பு

உலக நாடுகளின் தலைவர்களுக்கான APEC உச்சநிலைச் சந்திப்பின் முடிவில், 21 பிசிஃபிக் நாடுகளுக்கு இடையே தடையற்ற, பலதரப்பு வர்த்தக உறவு வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு நாள் கூட்டத்தின் இறுதி நாளான இன்று கொரோனா நோய்ப்பரவலால் பாதிக்கப்பட்ட உலகப் பொருளியலுக்கு ஆதரவளிக்க, ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெறும்.

நேற்றைய தொடக்க உரையில் சீன அதிபர் சி சின்பிங் (Xi Jinping) தன்னைப்பேணித்தனப் போக்கிற்கு எதிராகப் பேசினார்.

சீனா உள்பட எந்த நாடும் தனது கதவுகளை மூடிக்கொண்டு வளர முடியாது என்றார் அவர்.

அமெரிக்காவுடனான பூசல் தொடர்ந்தாலும் அதனுடான வர்த்தக உறவை சீனா வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாக திரு. சி குறிப்பிட்டார்.

இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் APEC கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அமெரிக்காவைப் பிரதிநித்துக் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருப்பதாக முன்பு அவர் கூறியிருந்தார்.

இன்று, ஜப்பானியப் பிரதமர் யோஷிஹிடே சுகா (Yoshihide Suga) "ஆசிய பிசிஃபிக்கில் மீண்டும் வளர்ச்சியைத் தொடங்குதல்" என்ற தலைப்பில் உரையாற்றவிருக்கிறார்.

செப்டம்பர் மாதம் பொறுபேற்றுக்கொண்ட அவர், APEC தலைவர்களிடம் கலந்துரையாடுவது இதுவே முதன் முறை.

அதைத் தொடர்ந்து நியூசிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டனும் (Jacinda Arden) உரையாற்றுவார்.  

Top