Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் ஆக முக்கியமானதாகக் கருதப்படும் ஒளிபரப்பின் 50ஆம் ஆண்டு நிறைவு

அப்போலோ 11 விண்கலம்.

வாசிப்புநேரம் -
உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் ஆக முக்கியமானதாகக் கருதப்படும் ஒளிபரப்பின் 50ஆம் ஆண்டு நிறைவு

(படம்: AFP)

அப்போலோ 11 விண்கலம்.

மனிதகுலத்துக்கும் குறிப்பாக அமெரிக்க விண்வெளி ஆய்வுநிலையமான நாசாவுக்கும், நீண்டநாள் கனவை நனவாக்கிய பெருமையை ஈட்டித் தந்த சிறப்புக்குரியது.

அந்த விண்கலத்தில் பயணம்செய்த நீல் ஆம்ஸ்ட்ராங்(Neil Armstrong), பஸ் ஆல்ட்ரின்(Buzz Aldrin) இருவரும்தான் நிலவில் கால் பதித்த முதல் மனிதர்கள்.

1969ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதியன்று அவர்களைச் சுமந்துகொண்டு நிலவில் தரையிறங்கியது விண்கலம்.

அதன் பக்கவாட்டில் பொருத்தப்பட்டிருந்த சிறப்புக் கேமரா அனுப்பிய படங்கள், அதுவரை மனிதகுலத்தின் கற்பனைக்கெட்டதாவையாய் இருந்தன.

பின்னர் ஆம்ஸ்ட்ராங்கும், ஆல்ட்ரினும் நிலவில் மிதப்பதுபோல் நடைபழகியதையும், பேசியதையும் அவை காட்டின.

பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவைக் கடந்து, பல மில்லியன் பேர் தொலைக்காட்சி மூலம் அந்தக் காணக்கிடைக்காத காட்சிகளைக் கண்டு அதிசயித்துப் போயினர்.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த படைப்பாளர் வால்ட்டர் கிரோங்கைட்(Walter Cronkite)-உம் அதற்கு விதிவிலக்கல்ல.

முதலில் பேச்சற்றுப் போன அவர், தன்னையும் மறந்து "நிலவில் மனிதன்..!" என்று கூவினார். ஆனால் அந்த நேரத்துக்கு அவர் தயாரித்து வைத்திருந்த வார்த்தைகள் எதுவும் சட்டென்று நினைவிற்கு வரவில்லை என்று பிறகு அவர் பகிர்ந்துகொண்டார்.

கால நேரம் பார்க்காமல் தொடர்ந்து அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய திரு. Walter Cronkiteஇன் அர்ப்பணிப்புத் தன்மை இன்றும் பலரின் பாராட்டுக்குரியதாய் விளங்குகிறது.

உலகத் தொலைக்காட்சி ஒளிபரப்பு வரலாற்றில் ஆகச் சிறந்த தனிநிகழ்ச்சியாக அது என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்