Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

iPhone-களில் பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டுபிடித்தால் 1 மில்லியன் டாலர்

iPhone-களில் பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டுபிடிக்கும் ஆய்வாளர்களுக்கு 1 மில்லியன் டாலர் சன்மானம் வழங்குவதாக Apple நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

iPhone-களில் பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டுபிடிக்கும் ஆய்வாளர்களுக்கு 1 மில்லியன் டாலர் சன்மானம் வழங்குவதாக Apple நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்தத் தகவலை லாஸ் வேகாஸ் நகரில் நேற்று நடைபெற்ற இணையப் பாதுகாப்பு மாநாட்டில் Apple நிறுவனம் அறிவித்தது.

அண்மைக்காலமாக iPhone-களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

அரசாங்க அமைப்புகள் Apple தொலைபேசிகளில் ஊடுருவல்கள் இடம்பெறுவதாகக் குறைகூறியிருந்தன.

அதற்குப் பதிலளிக்கும் விதமாக Apple நிறுவனம் சன்மானம் குறித்து அறிவித்துள்ளது.

கைத்தொலைபேசியைப் பயன்படுத்துபவரின் செயல்பாடுகள் சாராமல், வேறோர் இடத்தில் இருந்துகொண்டு அதை இயக்குவது போன்ற குறைபாட்டைக் கண்டுபிடிப்பதற்கே, அத்தகைய பெரிய சன்மானம் வழங்கப்படும் என்பதை நிறுவனம் தெளிவுபடுத்தியது.

இதற்கு முன்னர் ஒரு சிறிய குறைபாட்டைக் கண்டுபிடித்தால் 200,000 டாலர் வரை பரிசாகத் தருவதாய் Apple அறிவித்திருந்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்