Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆப்பிளுக்குப் பதிலாக Apple iPhoneஐப் பெற்ற வாடிக்கையாளர்!

நம்மில் பலரும் பணம் சேமித்து நமக்குப் பிடித்தமான திறன்பேசிகளை வாங்குவது வழக்கம்...

வாசிப்புநேரம் -

நம்மில் பலரும் பணம் சேமித்து நமக்குப் பிடித்தமான திறன்பேசிகளை வாங்குவது வழக்கம்...

ஆனால், ஒருவர் இணையத்தில் வாங்கிய மளிகைப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டபோது, அதில் புதிய திறன்பேசியைக் கண்டெடுத்தார்.

தமது பட்டியலில் ஆப்பிள்களை வாங்க ஆணை பிறப்பித்த நிக் ஜேம்ஸ் என்பவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

சம்பவம் பிரிட்டனில் நடந்தது.

ஐம்பது வயதான ஜேம்ஸ், Tesco கடையின் இணையத்தளத்திலிருந்து சில பொருள்களை வாங்க ஆணை பிறப்பித்தார். அதில் ஆப்பிள்களும் இருந்தன.

அவருக்கு விநியோகம் செய்யப்பட்ட பையில் ஒரு சிறப்புப் பரிசு இருப்பதாக அவரிடம் கூறப்பட்டது.

ஈஸ்டர் முட்டையோ என்னவோ என நினைத்த அவர்... ஆப்பிள்களுக்குப் பதில் Apple நிறுவனத்தின் iPhone SE திறன்பேசியைப் பையில் கண்டெடுத்தபோது ஆச்சரியம் அடைந்தார்.

Tesco நிறுவனத்தின் சிறப்புச் சலுகையின் கீழ் அவருக்கு அந்தப் பரிசு வழங்கப்பட்டது. iPhone, Airpod, Samsung சாதனங்கள் ஆகியவற்றை அந்நிறுவனம் சிலருக்கு இலவசப் பரிசுகளாக ஒரு வாரத்திற்கு வழங்கி வருகிறது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்