Images
  • apple isses
    (படம்: REUTERS/Shannon Stapleton)

iPhone X, 13 அங்குலமுள்ள MacBook சாதனங்களில் கோளாறு; இலவசமாகச் சரிசெய்யப்படும் : Apple நிறுவனம்

Apple நிறுவனம் அதன் iPhone X கைத்தொலைபேசிகளிலும்
13 அங்குலமுள்ள MacBook மடிகணினிகளிலும் சில கோளாறுகள் ஏற்பட்டிருப்பதைக் கண்டுபிடித்திருப்பதாகக் கூறியுள்ளது.

அதனால் ஏற்படும் பிரச்சினைகளை இலவசமாகச் சரிசெய்துகொடுக்கவிருப்பதாகவும் Apple தெரிவித்தது.
கடந்த ஆண்டு வெளியான iPhone Xஇன் தொடுதிரையில் கோளாறு ஏற்படலாம் என்றும் பாதிக்கப்பட்ட பாகங்களை இலவசமாக மாற்றிகொடுக்கவிருப்பதாகவும்
Apple சொன்னது.

13 அங்குலமுள்ள MacBook Pro மடிகணினிகளில் ஏற்படும் கோளாற்றால் அவற்றுள் இருக்கும் தகவல்கள் காணாமல்போகும் சாத்தியம் இருப்பதாய் Apple கூறியது. 

கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே MacBook Pro மடிகணினிகள் விற்பனையாகின.  

Top