Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தனிநபர் அந்தரங்கம் தொடர்பான செயலி அறிவிப்பைக் கட்டாயமாக்கும் Apple

Apple நிறுவனம், தனிநபர் அந்தரங்கம் தொடர்பான செயலி அறிவிப்புகளை, வரும் வாரங்களில் கட்டாயமாக்கவுள்ளது.

வாசிப்புநேரம் -

Apple நிறுவனம், தனிநபர் அந்தரங்கம் தொடர்பான செயலி அறிவிப்புகளை, வரும் வாரங்களில் கட்டாயமாக்கவுள்ளது.

புதிய விதிமுறை நடப்புக்கு வந்தால், செயலி மேம்பாட்டாளர்கள், பயனீட்டாளர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கு முதலில் அனுமதி கேட்பது அவசியம்.
அதன்வழி, Facebook போன்ற மின்னிலக்க விளம்பர நிறுவனங்களின் வியாபாரம் பாதிக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

அனுமதி கேட்டால், பயனீட்டாளர்கள் பலர் அதற்கு மறுத்துவிடுவார்கள் என்பதை நிபுணர்கள் சுட்டினர்.

புதிய விதிமுறை, iOS 14.5 இயங்கு தளம் (Operating System) செயல்பாட்டுக்கு வந்தவுடன் நடப்புக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், Apple, செயலி மேம்பாட்டாளர்களுக்கு மாற்று வழிகளை வழங்கிவருகிறது.

தனிநபர் அந்தரங்கத்தை மீறாத விளம்பர முறை உருவாக்கப்பட்டுவருகிறது.

-Reuters/dv 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்