Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Google-க்குப் போட்டியாக Apple தேடல்தளம்..விரைவில் வரலாம்

Google-க்குப் போட்டியாக Apple தேடல்தளம்..விரைவில் வரலாம்

வாசிப்புநேரம் -
Google-க்குப் போட்டியாக Apple தேடல்தளம்..விரைவில் வரலாம்

கோப்புப்படம்: REUTERS/Gonzalo Fuentes

Apple நிறுவனம், கூகள் (Google)நிறுவனத்துக்குப் போட்டியாகத் தேடல் தளம் ஒன்றை உருவாக்கிவருவதாக Financial Times நாளேட்டின் அறிக்கை குறிப்பிட்டது.

கூகளின் தேடல் தளத்துக்கு மாற்றாக அமையும் தளம் உருவாக்கப்பட்டுவருதாக அறிக்கை சொன்னது.

பெயர் குறிப்பிடாத சில ஆதாரங்களை மேற்கோள் காட்டி அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

Apple நிறுவனம் அண்மையில் அதன் iOS 14 செயல்பாட்டுத் தளத்தை வெளியிட்டது.

அதில் தேடல் தளம் உருவாக்கப்படுவதற்கான அறிகுறிகள் தென்பட்டதாகவும் அறிக்கை தெரிவித்தது.

தேடல்தளத் தொழில்நுட்பத்தில் கூகள் நிறுவனம் ஆதிக்கம் செலுத்துவதாய் அண்மையில் அதன் மீது அமெரிக்காவில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

கூகள் iOS கருவிகளில் பிரதான தேடல் தளமாக விளங்கவேண்டும் என்பதற்காக Apple நிறுவனத்துக்குப் பல பில்லியன் டாலர் கட்டணம் செலுத்துவதாய் அமெரிக்க நீதித்துறை விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

இதன் தொடர்பில் Apple நிறுவனம் கருத்துத் தெரிவிக்கவில்லை.

நிறுவனம் ஈராண்டுகளுக்கு முன், கூகள் நிறுவனத் தேடல்தளப் பிரிவின் தலைவர் ஜான் ஜியானெண்டிரியாவை (John Giannandrea) வேலைக்கு அமர்த்தியது.

Apple நிறுவனம் அதன் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தையும், Siri உதவி வழங்கும் சேவையையும் மேம்படுத்த அவரைப் பணியமர்த்தியதாக Financial Times அறிக்கை குறிப்பிட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்