Images
  • Apple
    (படம்: Pixabay)

ஓராண்டு வரை கெட்டுப்போகாத ஆப்பிள்கள்


குளிர்பதனப்பெட்டியில் ஓராண்டு வரை கெட்டுப்போகாத ஆப்பிள் பழங்கள் இன்று முதல் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளன.

Cosmic Crisp எனப்படும் அந்தப் பழங்களை உருவாக்கச் சுமார் 20 ஆண்டுகள் ஆயின.

இரு வகை ஆப்பிள்களைக் கலந்து புதுவகை Cosmic Crisp ஆப்பிள்களைத் தயாரிக்கும் முயற்சியில் 1997இலிருந்து ஈடுபட்டு வந்தது வாஷிங்டன் ஸ்டேட் (Washington State) பல்கலைக்கழகம். அதற்கான மொத்தச் செலவு சுமார் 10 மில்லியன் டாலர்.

மொறுமொறுவென இருக்கும் ஆப்பிள், இனிப்பான சாறு நிறைந்தது என்று கூறுகின்றனர் அதை உருவாக்கிய ஆய்வாளர்கள்.

மெதுவாகப் பழுப்படைவதால் பழத்தை ஓராண்டு வரை குளிர்பதனப்பெட்டியில் வைத்திருக்கலாம்.

இதுவரை சுமார் 12 மில்லியன் Cosmic Crisp ஆப்பிள் மரங்கள் நடப்பட்டுள்ளன. அமெரிக்காவின் மற்ற பகுதிகளில் அவ்வகை ஆப்பிள்களை வளர்க்கும் உரிமம் கொடுக்கப்படவில்லை.

பழத்தின் கறுஞ்சிவப்புத் தோலில் வெள்ளைப் புள்ளிகள், இரவின் வானத்தைப் போல இருப்பதால் பழங்களுக்கு Cosmic Crisp எனப் பெயர்சூட்டப்பட்டது.

அமெரிக்காவில் வாழைப்பழங்களுக்கு அடுத்து ஆக அதிகமாக விற்பனையாகும் பழம், ஆப்பிள்.


 

Top