Images
  • kid
    (படம்: Reuters)

பிள்ளைகளின் தனிநபர் தகவல்களைச் சேமிக்கும் செயலிகள்

அமெரிக்கா: சிறுவர்கள் விளையாடும் செயலிகளிலிருந்து தரவுகளைச் சேமித்து, சில நிறுவனங்கள் அவற்றை வேறு நிறுவனங்களுக்குப் பகிர்ந்து வருகின்றன.

"Fun Kid Racing" என்ற பிள்ளைகளுக்கான செயலி அதன் பயனீட்டாளர்கள் இருக்கும் இடம் உட்பட பல தகவல்களை இணைய விளம்பர நிறுவனங்களுக்கு விற்பனை செய்துள்ளது.

சிறுவர்களின் தகவல்களைப் பகிர்ந்துகொண்ட குற்றத்தின்கீழ் நியூ மெக்சிக்கோ தலைமைச் சட்ட அதிகாரி அலுவகம் வழக்குத் தொடுத்துள்ளது.

சிறுவர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவர்கள், இணைய ஊடுருவிகள், தவறான விளம்பரதாரர்களின் வலையில் சிறுவர்கள் சிக்காமல் இருக்க பிள்ளைகளின் தகவல்களைப் பகிர்வது சட்டத்துக்குப் புறம்பானது.

அந்த சட்டத்தை மீறியதாக "Fun Kid Racing" செயலியை உருவாக்கிய Tiny Lab Productions, செயலியை பெற்றோருக்கு விளம்பரம் செய்த கூகுள், Twitter மற்றும் மூன்று நிறுவனங்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

பிள்ளைகளுக்குப் பாதுகாப்பானது என கூகுளின் "Play store"இல் செயலி தவறுதலாக விளம்பரம் செய்யப்பட்டது என்று வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது.

செயலிகள் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பானவை என்று குறிப்பிடப்படுவதற்கு முன் அவற்றைச் சரிப்பார்க்கும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று கூகுள் பதிலளித்துள்ளது.

Top