Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'பிரேசில் மக்கள் காட்டிலிருந்து வந்தவர்கள்': அர்ஜெண்டினா அதிபர்

அர்ஜெண்டினா அதிபர் அல்பெர்ட்டோ ஃபெர்னாண்டஸின் (Alberto Fernandez) கருத்துகள், இனம் குறித்த விவாதத்தையும் Twitterஇல் கலவரத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

வாசிப்புநேரம் -

அர்ஜெண்டினா அதிபர் அல்பெர்ட்டோ ஃபெர்னாண்டஸின் (Alberto Fernandez) கருத்துகள், இனம் குறித்த விவாதத்தையும் Twitterஇல் கலவரத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

அப்படி அவர் என்ன தான் கூறினார்?

மெக்சிகோ மக்கள் இந்தியர்கள் (அமெரிக்கா) மூலம் வந்தவர்கள். பிரேசில் மக்கள் காட்டிலிருந்து வந்தவர்கள். ஆனால், அர்ஜெண்டினாவின் மக்கள் கப்பல்கள் மூலம் வந்தவர்கள். அந்தக் கப்பல்கள் ஐரோப்பாவிலிருந்து வந்தவை.

என அர்ஜெண்டினாவுக்கு வருகையளித்த ஸ்பானியப் பிரதமரிடம் திரு. ஃபெர்னாண்டஸ் குறிப்பிட்டார்.

அர்ஜெண்டினாவில் ஐரோப்பியக் குடியேறிகள் பலர் இருப்பதைக் குறிப்பதற்காகத் திரு. ஃபெர்னாண்டஸ் அவ்வாறு சொன்னதாகக் கூறப்படுகிறது.

இனம் குறித்த புரிந்துணர்வற்ற அவரின் கருத்துகளைப் பலரும் சமூகத் தளத்தில் குறைகூறினர்.

அதை அடுத்து அதிபர் ஃபெர்னாண்டஸ் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையில் திரு. ஃபெர்னாண்டஸிற்குப் பதிலளிக்கும் வகையில், பிரேசில் அதிபர் ஜெர் பொல்சனாரோ (Jair Bolsonaro) பழங்குடியினர் தலைப்பாகையுடன் காட்சியளிக்கும் தமது படம் ஒன்றை Twitterஇல் பதிவு செய்துள்ளார்.

-Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்