Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அர்ஜென்ட்டினாவில் நோய்த்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 3 மில்லியனை எட்டியது; மருத்துவமனைகள் நிரம்பிவிட்டன

அர்ஜென்ட்டினாவில் நோய்த்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 3 மில்லியனை எட்டியது; மருத்துவமனைகள் நிரம்பிவிட்டன

வாசிப்புநேரம் -

அர்ஜென்ட்டினாவில் நேற்றைய நிலவரப்படி 3 மில்லியன் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
மருத்துவமனைகள் நிரம்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 11,394 புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியிருப்பதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அதே 24 மணி நேரத்தில் மாண்டோரின் எண்ணிக்கை 156. அதனையும் சேர்த்து அங்கு மாண்டோரின் மொத்த எண்ணிக்கை 64,252.

அர்ஜென்ட்டினாவில் இரண்டாம் கட்டமாகக் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் மோசமாகிவருவதையொட்டி அதிபர் அல்பர்ட்டோ ஃபெர்னாண்டஸின் (Alberto Fernandez) அரசாங்கம் மேலும் கடுமையான கட்டுப்பாடுகளை அண்மையில் கொண்டுவந்தது. எனினும் அவை போதவில்லை என்று மருத்துவ ஊழியர்கள் கூறுகின்றனர்.

- Reuters 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்