Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பின் தலைமையகத்திற்குள் நுழைய முயன்ற ஆடவர் சுடப்பட்டார்

அமெரிக்க மத்தியப் புலனாய்வு அமைப்பின் (CIA) தலைமையகத்திற்குள் நுழைய முயன்ற ஆடவர் சுடப்பட்டதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

வாசிப்புநேரம் -

அமெரிக்க மத்தியப் புலனாய்வு அமைப்பின் (CIA) தலைமையகத்திற்குள் நுழைய முயன்ற ஆடவர் சுடப்பட்டதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

காரில் வந்த அந்த ஆடவர் வளாகத்திற்குள் நுழைய பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

ஆடவரைச் சரணடையச் சொல்லி, சில மணி நேரம் பேச்சு நடத்தியதாகவும் கூறப்பட்டது.

அதை ஏற்க மறுத்து, ஆயுதம் ஏந்திய ஆடவர் காரிலிருந்து வெளியேறியபோது, FBI அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

காயமடைந்த ஆடவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

முன்னர், 1993-இல், மத்தியப் புலனாய்வு அமைப்பின் தலைமையகத்திற்குள் நுழைய முயன்ற மற்றோர் ஆடவர், ஊழியர்கள் இருவரைச் சுட்டுக் கொன்றார். மேலும் மூவரைக் காயப்படுத்தினார்.

பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்ற அவர், 4 ஆண்டுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.

2002- இல் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
-AFP 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்