Images
  • ASEAN (1)
    கோப்புப் படம்: AFP/Romeo Gacad

பொருளியல் வளர்ச்சிகண்டுவரும் நாடுகளில் உலகளவில் சிறப்பாகச் செயல்படும் ஆசியான் நாடுகள்

பொருளியல் வளர்ச்சிகண்டுவரும் நாடுகளில் உலகளவில் ஆசியான் நாடுகள் சிறப்பாகச் செயல்படுகின்றன.

மெக்கின்சி உலக நிலையம் (McKinsey Global Institute) வெளியிட்ட அறிக்கையில் அந்தத் தகவல் வெளியானது.

ஆசியானின் பொருளியல் வளர்ச்சிக் கொள்கைகளையும் ஆற்றல்மிக்க நிறுவனங்களையும் அது சுட்டியது.

வேகமான வளர்ச்சியை நிலைநாட்ட ஆசியான் நாடுகள் அவற்றின் வருவாய் சமமின்மை போன்ற விவகாரங்களையும் கையாள வேண்டும் என்று கூறப்பட்டது.

71 நாடுகள் ஆய்வில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
பிற நாடுகளோடு ஒப்பிடுகையில் வேகமாகவும் தொடர்ந்து நிலையாகவும் வளர்ச்சி கண்டுவரும் 18 நாடுகள் அடையாளங்காணப்பட்டன.

சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தாய்லந்து என அவற்றுள் 8 ஆசியானைச் சேர்ந்தவை.

கடந்த 50 ஆண்டாக, சராசரியாகக் குறைந்தது ஆண்டுக்கு மூன்றரை விழுக்காடு பொருளியல் வளர்ச்சி கண்ட நாடுகள் அவை.


Top