Images
  • asean (2)
    (கோப்புப் படம்: AFP/Romeo Gacad)

ஆசிய, ஐரோப்பிய தலைவர்கள் கலந்துகொள்ளும் 2 நாள் மாநாடு

ஆசியாவையும் ஐரோப்பாவையும் சேர்ந்த தலைவர்கள், 2 நாள் மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

நாடுகளுக்கு இடையிலான பலதரப்பு உறவுகளைப் பலப்படுத்துதல், நோய்ப்பரவலிலிருந்து மீள்வதை எளிதாக்குதல் போன்றவை கூட்டத்தில் ஆராயப்படும்.

A-sem என்றழைக்கப்படும் ஆசிய ஐரோப்பியக் கூட்டம் , காணொளி வழியாக நடத்தப்படும். சென்ற ஆண்டு நோய்ப்பரவல் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.

கம்போடியப் பிரதமர் ஹுன் சென் (Hun Sen) அந்தச் சந்திப்பை இன்று பின்னேரத்தில் வழிநடத்துவார்.

30 ஐரோப்பிய நாடுகள், 21 ஆசிய நாடுகள் ஆகியவற்றைச் சேர்ந்த தலைவர்கள் அதில் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மியன்மாரிலிருந்து அரசியல் சாரா பிரதிநிதி மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டு ராணுவ அரசாங்கம் மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று கூறியது.

மியன்மார் ராணுவத் தலைவர் மின் ஆங் லைன் (Min Aung Hlaing) நாட்டின் அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவராததால் அந்த முடிவு எடுக்கப்பட்டது. 

Top