Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பருவநிலை மாற்றத்தால் பசிபிக் வட்டாரத்தின் பொருளியல் 2.6% குறையும்: ஆய்வு

பருவநிலை மாற்றத்தைக் கையாள இயலாத காரணத்தால், 2050ஆம் ஆண்டுக்குள் ஆசிய பசிபிக் வட்டாரத்தின் பொருளியல் 2.6 விழுக்காடு குறையும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

வாசிப்புநேரம் -
பருவநிலை மாற்றத்தால் பசிபிக் வட்டாரத்தின் பொருளியல் 2.6% குறையும்: ஆய்வு

(படம்: TODAY)

பருவநிலை மாற்றத்தைக் கையாள இயலாத காரணத்தால், 2050ஆம் ஆண்டுக்குள் ஆசிய பசிபிக் வட்டாரத்தின் பொருளியல் 2.6 விழுக்காடு குறையும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

உலக அளவில் சராசரியாகப் பொருளியல்கள் 3 விழுக்காடு குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

அதனுடன் ஒப்பிடுகையில் ஆசிய பசிபிக் வட்டாரத்துக்கான கணிப்பு குறைவு.

82 நாடுகளைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது.

அவற்றின் பொருளியல்கள் எவ்வாறு பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் போன்ற அம்சங்கள் கருத்திற்கொள்ளப்பட்டன.

The Economist நாளிதழ் நடத்திய அந்த ஆய்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்