Images
  • AstraZeneca
    (படம்: REUTERS/Dado Ruvic/Illustration)

பிரிட்டன் : பிள்ளைகள் மீதான AstraZeneca தடுப்பூசி சோதனைத் திட்டம் தற்காலிக நிறுத்தம்

பிரிட்டனில் பிள்ளைகள் மீதான AstraZeneca தடுப்பூசி சோதனைத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசிக்கும் ரத்தக் கட்டிகளுக்கும் தொடர்பு இருக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுவதாக அதனை உருவாக்கிய Oxford பல்கலைக்கழகம் சொன்னது.

எனினும் சோதனைகளில் பாதுகாப்பு அக்கறைகள் ஏதும் எழவில்லை என்று பொதுமக்களுக்கு அது உறுதியளித்தது.

உலகளவில் பெரியவர்களுக்கு அந்தத் தடுப்பூசியினால் ரத்தக்கட்டி ஏற்படுகிறதா என்பது குறித்து தற்போது அவசரமாக மதிப்பீடு செய்யப்படுகிறது.

தடுப்பூசியினால் ஏற்படக்கூடிய அபாயங்களைவிட நன்மைகளே அதிகம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.  

-Reuters

Top