Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பக்க விளைவுகள் காரணமாக, AstraZeneca தடுப்பூசிகளுக்கு ஐரோப்பியச் சுகாதார ஊழியர்களிடையே எதிர்ப்பு

சில ஐரோப்பிய நாடுகளின் சுகாதார ஊழியர்களுக்கு AstraZeneca தடுப்பூசிகளைப் போட்ட பின்னர் பக்கவிளைவுகள் ஏற்பட்டதால் ஊழியர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.  

வாசிப்புநேரம் -
பக்க விளைவுகள் காரணமாக, AstraZeneca தடுப்பூசிகளுக்கு ஐரோப்பியச் சுகாதார ஊழியர்களிடையே எதிர்ப்பு

(படம்: REUTERS/Dado Ruvic/Illustration)

சில ஐரோப்பிய நாடுகளின் சுகாதார ஊழியர்களுக்கு AstraZeneca தடுப்பூசிகளைப் போட்ட பின்னர் பக்கவிளைவுகள் ஏற்பட்டதால் ஊழியர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

சில மருத்துவமனை ஊழியர்களும் இதர இடங்களின் முன்னிலை ஊழியர்களும் வேலைக்குச் செல்ல முடியாத அளவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

அதனால் ஏற்கனவே ஆள் பற்றாக்குறையால் தவிக்கும் சேவைகளுக்குக் கூடுதல் சிரமம் ஏற்பட்டது.

தடுப்பூசி போடப்பட்டதும் கடுமையான காய்ச்சல், தலைவலி போன்றவை ஏற்படுவது வழக்கம். அவை ஓரிரண்டு நாள்களில் சரியாகிவிடும்.

இருப்பினும், AstraZeneca தடுப்பூசிகளை இடைவெளி விட்டு போடுமாறு பிரான்ஸின் சுகாதார அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.

சுவீடனில் 2 வட்டாரங்களில் தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் சில அத்தியாவசியச் சேவை ஊழியர்கள் தடுப்பூசி வேண்டாம் என்று மறுத்துவருகின்றனர்.

மருத்துவ ஆய்வுச் சோதனைகளின்படி, அறிகுறிகள் எதிர்பார்த்தபடிதான் உள்ளன என்றும் கடுமையான பக்க விளைவுகள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் AstraZeneca-வின் பேச்சாளர் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்