Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

AstraZeneca தடுப்பூசி 76% செயல்திறன் கொண்டது - அமெரிக்கச் சோதனை முடிவுகள்

AstraZeneca நிறுவனம் அதன் COVID-19 தடுப்பூசி, அறிகுறிகள் கொண்ட நோயைத் தடுப்பதில் 76 விழுக்காடு ஆற்றல் கொண்டவை எனக் கூறியுள்ளது.

வாசிப்புநேரம் -
AstraZeneca தடுப்பூசி 76% செயல்திறன் கொண்டது - அமெரிக்கச் சோதனை முடிவுகள்

(படம்: REUTERS/Dado Ruvic/Illustration)

AstraZeneca நிறுவனம் அதன் COVID-19 தடுப்பூசி, அறிகுறிகள் கொண்ட நோயைத் தடுப்பதில் 76 விழுக்காடு ஆற்றல் கொண்டவை எனக் கூறியுள்ளது.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட பெரிய அளவிலான சோதனையை அடுத்து, அந்தப் புதிய புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டன.

இதற்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட அளவை விட அது குறைவு.

பழைய தகவல்களைக் கொண்டு அந்த விவரம் வெளியிடப்பட்டதாய் அமெரிக்க சுகாதார அதிகாரிகள் குறைகூறினர்.
வரும் வாரங்களில், அமெரிக்காவில் அவசரநிலைப் பயன்பாட்டுக்கான அனுமதியைப் பெற AstraZeneca நிறுவனம் திட்டமிடுகிறது.

தடுப்பூசியினால் ஏற்படும் பக்கவிளைவுகள், அதன் ஆற்றல் போன்றவற்றின் தொடர்பில் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ரத்தம் உறையும் பிரச்சினையோடு அந்தத் தடுப்பூசி தொடர்புபடுத்தப்பட்டதை அடுத்து அதன் பயன்பாட்டைப் பல நாடுகள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

- AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்