Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

AstraZeneca தடுப்பூசிக்கும் ரத்தம் உறைந்து போவதற்கும் சம்பந்தம் உண்டு... உலக நாடுகள் கவலை

AstraZeneca தடுப்பூசிக்கும் ரத்தம் உறைந்து போவதற்கும் தொடர்பிருக்கலாம் என்று கண்டறியப்பட்டிருப்பதால், உலக நாடுகளிடையே கவலை அதிகரித்துள்ளது. 

வாசிப்புநேரம் -

AstraZeneca தடுப்பூசிக்கும் ரத்தம் உறைந்து போவதற்கும் தொடர்பிருக்கலாம் என்று கண்டறியப்பட்டிருப்பதால், உலக நாடுகளிடையே கவலை அதிகரித்துள்ளது.

தற்போது AstraZeneca தடுப்பூசி போடுவதை அதிகமான நாடுகள் நிறுத்தியுள்ளன அல்லது கட்டுப்படுத்தியுள்ளன.

அந்தத் தடுப்பூசிகளை வாங்கும் திட்டத்தை ஆப்பிரிக்க ஒன்றியம் கைவிட்டுள்ளது.

நார்வேயும் டென்மார்க்கும் தடுப்பூசிக்கான தற்காலிகத் தடையை நீட்டிக்க முடிவெடுத்துள்ளன.

ஆனால், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் AstraZeneca தடுப்பூசியைத் தொடர்ந்து பயன்படுத்தவுள்ளன.
என்றாலும், 55உம், அதற்கு மேற்பட்ட வயதுள்ளோருக்கும் மட்டுமே தடுப்பூசி போடவிருப்பதாக அவை கூறின.

இளம் வயதினருக்கு அந்த ஊசியால் ரத்தம் உறைந்து போகும் அபாயம் அதிகம் என்பதால் அவ்வாறு முடிவெடுத்திருப்பதாக அந்நாடுகள் கூறின.

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே AstraZeneca தடுப்பூசி போடவிருப்பதாக ஸ்பெயின் கூறியுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்