Images
  • AUD Weakens
    (படம்: AFP)

சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான ஆஸ்திரேலிய டாலரின் மதிப்பு, ஆறு மாதங்கள் இல்லாத அளவுக்குக் குறைந்தது


சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான ஆஸ்திரேலிய டாலரின் மதிப்பு, ஆறு மாதங்கள் இல்லாத அளவுக்குக் குறைந்திருக்கிறது.

ஆஸ்திரேலிய மத்திய வங்கி, வட்டி விகிதத்தைக் குறைக்கக் கூடுமென்ற முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பு அதற்கொரு காரணமாகக் கூறப்படுகிறது.

உள்நாட்டுப் பொருளியல் குறித்த சாதகமற்ற தகவல்கள், அமெரிக்க-சீன வர்த்தகப் பூசல் உள்ளிட்ட காரணங்களால் அத்தகைய எதிர்பார்ப்பை அவர்கள் கொண்டுள்ளனர்.

இன்று, ஓர் ஆஸ்திரேலிய டாலருக்கு நிகரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு 0.9423 ஆக இருந்தது. இதற்குமுன், இந்த ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் தேதி அது 0.9264 ஆக இருந்தது.

இந்த ஆண்டு மட்டும், சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான ஆஸ்திரேலிய டாலரின் மதிப்பு 1.82 விழுக்காடு குறைந்ததாக, Bloomberg செய்தி நிறுவனம் தெரிவித்தது.

ஆஸ்திரேலிய மத்திய வங்கி, ஏற்கனவே இந்த மாதம் 4ஆம் தேதி, மூன்று ஆண்டுகளில் முதன்முறையாக வட்டி விகிதத்தைக் குறைத்தது.

25 அடிப்படைப் புள்ளிகள் குறைந்து அது முன்னெப்போதும் இல்லாத அளவில் இப்போது 1.25 விழுக்காடாக உள்ளது.
 

Top