Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சட்ட சர்ச்சைக்குப் பிறகு, ஆஸ்திரேலிய Seven West Media நிறுவனத்துக்கும், கூகள், Facebook ஆகியவற்றுக்கும் இடையே உடன்பாடுகள்

ஆஸ்திரேலியாவின் Seven West Media தொலைக்காட்சி, செய்தித்தாள் நிறுவனம், Facebook, கூகள் நிறுவனங்களோடு அடுத்த சில ஆண்டுக்கான உடன்பாட்டினைச் செய்துகொண்டுள்ளது.

வாசிப்புநேரம் -

ஆஸ்திரேலியாவின் Seven West Media தொலைக்காட்சி, செய்தித்தாள் நிறுவனம், Facebook, கூகள் நிறுவனங்களோடு அடுத்த சில ஆண்டுக்கான உடன்பாட்டினைச் செய்துகொண்டுள்ளது.

அடுத்த ஐந்தாண்டுக்கு கூகளுக்கும் அடுத்த மூவாண்டுக்கு Facebookஇற்கும் அது தகவல்களை வழங்கவுள்ளது.

உடன்பாடுகளின் நிபந்தனைகள் வெளியிடப்படவில்லை.

ஆஸ்திரேலியாவில் செய்தித் தளங்கள் தொடர்பான கடும் சட்டங்கள் அண்மையில் செயல்படுத்தப்பட்டபோது பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான கூகளும் Facebookஉம் அந்நாட்டுச் செய்திகளை வெளியிடப்போவதில்லை எனக் கூறியிருந்தன.

இரண்டே மாதங்களில் பெரும் மாற்றமாக இப்போது புதிய உடன்பாடுகள் செய்துகொள்ளப்பட்டுள்ளன.

இணையச் சேவைகள் வழங்கும் பெரிய நிறுவனங்களோடு உள்நாட்டு ஊடக நிறுவனங்கள் இணக்கம் காணவில்லை என்றால் அரசாங்கம் தலையிடலாம் என்ற ஆஸ்திரேலியச் சட்டத்தால் உடன்பாடுகள் செய்துகொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்