Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆஸ்திரேலியப் பாலூட்டிகள் அழிந்துபோகும் அபாயத்தில் உள்ளன - ஆய்வாளர்கள்

கங்காருவைப் போன்ற ஆஸ்திரேலியாவின் மற்ற பாலூட்டிகளை எதிர்காலத்திலும் பூமியில் காண இயலுமா?

வாசிப்புநேரம் -

ஆஸ்திரேலியாவில் மட்டுமே இயற்கையாக வாழும் விலங்குகளில் ஒன்று கங்காரு.

ஆனால், கங்காருவைப் போன்ற ஆஸ்திரேலியாவின் மற்ற பாலூட்டிகளை எதிர்காலத்திலும் பூமியில் காண இயலுமா?

அவை அழிந்து விடுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகக் கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.

10 ஆஸ்திரேலியப் பறவை இனங்களும் ஏழு பாலூட்டி இனங்களும் அடுத்த 20 ஆண்டுகளில் அழிந்துவிடலாம்.

ஆனால், அவற்றைப் பாதுகாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டால் இந்நிலை மாறலாம் என்று இன்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

ஆஸ்திரேலியாவில் உள்ள விலங்குகள் அழிந்துபோகும் விகிதம் உலகத்திலேயே ஆக உயர்ந்தது.

இதுவரை, 34 பாலூட்டி இனங்களும் 29 பறவை இனங்களும் அழிந்துள்ளன என்ற தகவலையும் ஆய்வாளர்கள் பகிர்ந்துகொண்டனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்