Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆஸ்திரேலியக் காட்டுத்தீ : நூற்றுக்கும் மேற்பட்ட விலங்கினங்களுக்கு அவசர உதவி தேவை

ஆஸ்திரேலியக் காட்டுத் தீயில் பாதிக்கப்பட்ட 113 விலங்கினங்களுக்கு அவசர உதவி தேவைப்படுவதாகத் தெரியவந்துள்ளது.

வாசிப்புநேரம் -

ஆஸ்திரேலியக் காட்டுத் தீயில் பாதிக்கப்பட்ட 113 விலங்கினங்களுக்கு அவசர உதவி தேவைப்படுவதாகத் தெரியவந்துள்ளது.

அடையாளம் காணப்பட்ட விலங்கு வகைகளில் கோலாக்கள், பறவை, மீன், தவளை ஆகியவற்றுக்கு அதிக உதவி தேவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

காட்டுத்தீயால், விலங்கு வகைகளின் தங்குமிடங்களில் சுமார் 30 விழுக்காடு அழிந்துவிட்டது.

இருப்பினும், எந்தவொரு விலங்கு வகையும் அழிவைச் சந்திக்கவில்லை என்பது நற்செய்தி என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

இதற்கு முன்பு, ஒரு பில்லியனுக்கு மேலான விலங்குகள் மாண்டிருக்கலாம் என்று நம்பப்பட்டது.

கடந்த மாதம், வனவிலங்குகளையும், அவற்றின் தங்குமிடங்களையும் காப்பாற்றுவதற்கு, 33 மில்லியன் டாலர் செலவிடவிருப்பதாக ஆஸ்திரேலியா தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்