Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆஸ்திரேலியாவில் மீண்டும் அதிகரிக்கும் கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கிருமித்தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை மீண்டும் கணிசமாக அதிகரித்துள்ளது.

வாசிப்புநேரம் -

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கிருமித்தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை மீண்டும் கணிசமாக அதிகரித்துள்ளது.

புதிதாக அங்கு 473 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு எவ்வாறு கிருமி தொற்றியது என்பது தெரியவில்லை.

புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் புதிதாய்க் குறைந்தது 30 பேருக்குக் கிருமி தொற்றியது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில், 12 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட பிள்ளைகள், இன்று முதல் Pfizer தடுப்பூசிக்குப் பதிவு செய்துகொள்ளலாம்.

மாணவர்களை மீண்டும் பள்ளிக்குத் திரும்ப அனுப்ப எடுக்கப்படும் முயற்சி அது.

நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்தின் கிரேட்டர் சிட்னி (Greater Sydney) வட்டாரத்தில் நடப்பில் உள்ள கட்டுப்பாடுகள் இன்று தளர்த்தப்படுகின்றன.

அங்கு தினசரி எண்ணிக்கை தொடர்ந்து உச்சத்தில் இருந்தாலும் அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்