Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆஸ்திரேலியா: நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் கிருமித்தொற்று தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன

ஆஸ்திரேலியா: நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் கிருமித்தொற்று தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன

வாசிப்புநேரம் -
ஆஸ்திரேலியா: நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் கிருமித்தொற்று தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன

படம்: AFP / William WEST

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கிருமித்தொற்று தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன.

அங்கு கடந்த 3 வாரங்களில் உள்ளூரில் யாருக்கும் நோய்ப்பரவல் அடையாளம்காணப்படவில்லை.

அடுத்த மாதம் முதல் Sydneyயிலுள்ள உணவகங்கள், மதுபானக் கூடங்கள், காப்பிக் கடைகள் ஆகியவற்றில் கூடுதலானோர் அனுமதிக்கப்படுவர்.

வெளிப்புறங்களில் 50 பேர் வரை ஒன்றுகூடலாம்.

சிட்னியின் மத்திய வர்த்தக வட்டார ஊழியர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்ப அனுமதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கிறது.

ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலைபார்க்க வகைசெய்யும்படி முதலாளிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த உத்தரவை அது மீட்டுக்கொள்ளும்.

அதனால் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்வோர் எண்ணிக்கை உயரக்கூடும் என்று சிட்னி முதல்வர் கூறியுள்ளார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்