Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆஸ்திரேலிய மாநிலத்தில் முடக்கநிலை தளர்த்தப்பட்ட மறுநாள் மீண்டும் நோய்த்தொற்றுச் சம்பவம்

ஆஸ்திரேலிய மாநிலத்தில் முடக்கநிலை தளர்த்தப்பட்ட மறுநாள் மீண்டும் நோய்த்தொற்றுச் சம்பவம்

வாசிப்புநேரம் -
ஆஸ்திரேலிய மாநிலத்தில் முடக்கநிலை தளர்த்தப்பட்ட மறுநாள் மீண்டும் நோய்த்தொற்றுச் சம்பவம்

(கோப்புப் படம்: AFP/William WEST)

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில், புதிதாக ஒருவருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அங்கு, 4 மாதங்களாக நடப்பில் இருந்த கிருமித்தொற்று தொடர்பான முடக்கநிலை நேற்று தளர்த்தப்பட்டது.

கடந்த 24 மணி நேரத்தில், மூவருக்குக் கிருமித்தொற்று உறுதியானது. ஆனால், அவர்களில் இருவருக்கு ஏற்கெனவே நோய்த்தொற்று இருந்திருக்கக் கூடுமென விக்டோரியா மாநில முதல்வர் டேனியல் ஆண்ட்ரூஸ் (Daniel Andrews) தெரிவித்தார்.

கடந்த 24 மணிநேரத்தில், யாரும் கிருமித்தொற்றால் மாண்டுபோகவில்லை.

இருப்பினும், ஆஸ்திரேலியாவில் கிருமித்தொற்றால் மாண்டவர்களில் பெரும்பாலோர் விக்டோரியா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

ஆஸ்திரேலியாவிலேயே அதிக மக்கள்தொகை கொண்டநியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில், உள்ளூர் அளவில் கடந்த 24 மணிநேரத்தில் மூவருக்குக் கிருமித்தொற்று உறுதியானது.

அவர்களையும் சேர்த்து, ஆஸ்திரேலியாவில் மொத்தம் 27,500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 905 பேர் மாண்டனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்