Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லந்தில் முடக்கநிலை ஈஸ்டர் விடுமுறைக் காலம் வரை நீடிக்குமா?

ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லந்து மாநிலத்தில் கிருமிப்பரவல் ஏற்பட்டிருக்கக்கூடிய மேலும் 80க்கும் அதிகமான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 

வாசிப்புநேரம் -
ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லந்தில் முடக்கநிலை ஈஸ்டர் விடுமுறைக் காலம் வரை நீடிக்குமா?

(படம்: Reuters/Loren Elliott)

ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லந்து மாநிலத்தில் கிருமிப்பரவல் ஏற்பட்டிருக்கக்கூடிய மேலும் 80க்கும் அதிகமான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அதன் காரணமாக, மாநிலத் தலைநகர் பிரிஸ்பேனில் ஈஸ்டர் கால விடுமுறை வரை முடக்கநிலை நீட்டிக்கப்படுமா என்று தெரிந்துகொள்ள குடியிருப்பாளர்கள் காத்திருக்கின்றனர்.

அங்கு தற்போது 3 நாள் முடக்கநிலை நடப்பில் உள்ளது. 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள், நாளைவரை வீட்டிலேயே இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

பிரிஸ்பேனில் 15 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர்களில் 8 பேருக்கு பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட புதுரகக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

அந்நகரத்தில், அடுத்துவரும் நாள்களில், மேலும் சிலருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்படலாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மற்ற சில மாநிலங்கள் குவீன்ஸ்லந்துடனான எல்லைகளை எல்லைகளை மூடியுள்ளன.

அதனால் ஈஸ்டர் விடுமுறைக் காலப் பயணத் திட்டங்கள் தொடருமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

- Reuters/kg

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்