Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆஸ்திரேலியத் தீயணைப்பாளர்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் ஒளியூட்டு

ஆஸ்திரேலிய தீயணைப்பாளர்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் விதத்தில் சிட்னி ஓப்ரா ஹவுஸ் ஒளியூட்டப்பட்டது.  

வாசிப்புநேரம் -
ஆஸ்திரேலியத் தீயணைப்பாளர்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் ஒளியூட்டு

(படம்: NSW Rural Fire Service)

ஆஸ்திரேலிய தீயணைப்பாளர்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் விதத்தில் சிட்னி ஓப்ரா ஹவுஸ் ஒளியூட்டப்பட்டது.

நாட்டின் பல பகுதிகளில் காட்டுத் தீயை அணைக்கப் போராடும் தீயணைப்பாளர்களின் பணிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஓப்ரா ஹவுஸின் வெளிப்புறம், படங்களாலும் "THANK YOU FIRIES " என்ற வாசகங்களாலும் ஒளியூட்டப்பட்டது.

தீயணைப்பாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு அவர்களுக்கு நம்பிக்கையும் ஊக்கமும் கொடுப்பது ஒளியூட்டின் குறிக்கோள்.

நேற்று முன்தினம் மாலை தொடங்கி இரவு 11 மணிவரை அந்த ஒளியூட்டு நீடித்தது.

ஆஸ்திரேலியாவில் எரியும் காட்டுத் தீயால் குறைந்தது 27 பேர் மாண்டனர். அவர்களில் தொண்டூழியத் தீயணைப்பாளர்களும் அடங்குவர். 2,000க்கும் மேற்பட்ட வீடுகள் காட்டுத் தீயால் சேதமடைந்துள்ளன.

காட்டுத் தீயால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிதி திரட்டும் வகையில் மார்ச் மாதத்தில் சிட்னி ஓப்ரா ஹவுஸ் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்