Images
  • australia
    (படம்: AFP)

'அதிகரித்துவரும் COVID-19 கிருமித்தொற்றுச் சம்பவங்களைச் சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய சுகாதார நிலையங்கள் திணறும் நிலை ஏற்படலாம்'

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் COVID-19 கிருமித்தொற்றுச் சம்பவங்களை அந்நாட்டுத் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் சமாளிக்கமுடியாமல் திணறும் நிலை தொடங்கக்கூடும் என்று அரசியல் தலைவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் முக்கிய சுகாதார அமைப்பான Centrelinkஇன் அலுவலகங்களுக்கு வெளியில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.

அதேபோன்ற நீண்ட வரிசைகள் மருத்துவமனைகளிலும் உருவானால் மோசமான விளைவுகள் நேரிடும் என்று விக்டோரியா மாநிலத் தலைவர் டேனியல் ஆண்ட்ரூஸ் எச்சரித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு இடைவெளி விதிமுறைகளை மீறி பலரும் கடற்கரைகளுக்கும் இரவு விடுதிகளுக்கும் சென்றிருந்தது ஆஸ்திரேலியத் தலைவர்களிடையே மனவுளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இதுவரை 2,250க்கும் அதிகமானோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சுமார் 50 விழுக்காட்டினர் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

அங்கு புதிதாகக் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இரண்டு மாத ஆண் குழந்தையும், ஏழு வயதுச் சிறுமியும் அடங்குவர்.

 

Top