Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆஸ்திரேலியா - நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 1,200 சம்பவங்கள்; சிட்னி வட்டாரத்தில் முடக்கம் நீக்கம்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்தில் புதிதாக 1,200க்கும் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
ஆஸ்திரேலியா - நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 1,200 சம்பவங்கள்; சிட்னி வட்டாரத்தில் முடக்கம் நீக்கம்

(கோப்புப் படம்: REUTERS/Loren Elliott)

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்தில் புதிதாக 1,200க்கும் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 12 பேர் மாண்டனர். அவர்களில் 10 பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள்.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 16 வயதுக்கு மேற்பட்டோரில், முதல் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதம் 80 விழுக்காட்டைக் கடந்துவிட்டது.

அடுத்த மாத நடுப்பகுதியிலிருந்து, கிருமிப்பரவல் கட்டுபாடுகளைத் தளர்த்தும் திட்டங்களை மாநில முதல்வர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் (Gladys Berejiklian) வெளியிட்டுள்ளார்.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதம் சுமார் 47 விழுக்காடு.

சிட்னி வட்டாரத்தின் 12 பகுதிகளில் நடப்பில் உள்ள மாலை நேரக் கட்டுப்பாடுகள் இன்றிரவு முதல் தளர்த்தப்படுகின்றன.

ஆனால் நடப்பில் உள்ள மற்ற விதிகளை முறையாகப் பின்பற்றுமாறு முதல்வர் பெரெஜிக்லியன் வலியுறுத்தினார். 

-Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்