Images
  • astrazeneca
    (படம்: REUTERS/Kai Pfaffenbach)

3 மில்லியன் முறை போடக்கூடிய AstraZeneca தடுப்பூசிகள் வந்துசேரவில்லை: ஆஸ்திரேலியா

ஐரோப்பிய ஒன்றியம் விதித்த ஏற்றுமதித் தடைகளுக்கு மத்தியில், 3 மில்லியனுக்கும் அதிகமான AstraZeneca தடுப்பூசிகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் தேசிய அளவிலான தடுப்பூசித் திட்டத்தை அது பாதித்துள்ளது.

மார்ச் மாத இறுதிக்குள், குறைந்தது 4 மில்லியன் முறை தடுப்பூசிகள் போடத் திட்டமிருப்பதாக அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர்.

ஆனால், 670,000 பேருக்குத்தான் தடுப்பூசி போட முடிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வர வேண்டிய AstraZeneca தடுப்பூசிகள்
கப்பல் போக்குவரத்துப் பிரச்சினைகள் காரணமாக திட்டமிட்டபடி வந்துசேரவில்லை என்று தற்காலிகத் தலைமை மருத்துவ அதிகாரி மைக்கேல் கிட் (Michael Kidd) தெரிவித்தார்.

- Reuters/zl 

Top