Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆஸ்திரேலியா: காட்டுத்தீயால் நூற்றுக்கணக்கானோர் வீடுகளைவிட்டு வெளியேறினர்

ஆஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக நூற்றுக்கணக்கானோர் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
ஆஸ்திரேலியா: காட்டுத்தீயால் நூற்றுக்கணக்கானோர் வீடுகளைவிட்டு வெளியேறினர்

(படம்: AFP)

ஆஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக நூற்றுக்கணக்கானோர் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர்.

குவீன்ஸ்லந்து, நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) ஆகிய பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக எரிந்து வரும் காட்டுத்தீயைக் கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பாளர்கள் போராடி வருகின்றனர்.

கடுமையான அந்தத் தீக்குக் குறைந்தது 21 வீடுகள் இரையாகின.

இனி வரும் நாட்களில் வறட்சி தொடர்வதுடன் பலத்த காற்றும் வீசும் என்பதால் காட்டுத் தீயைக் கட்டுக்குள் கொண்டு வர ஒரு வாரமாகலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு ஆண்டுகளாக மழை பெய்வது குறைந்துள்ளதால் ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரையோரப் பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்