Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

விக்டோரியாவில் ஒரே ஒரு நோய்த்தொற்றுச் சம்பவம்!

சில மாதங்களாகவே நோய் அதிகமாகப் பரவிக்கொண்டிருந்த ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ஒரேயொரு நோய்த்தொற்றுச் சம்பவம் மட்டுமே பதிவாகியுள்ளது.

வாசிப்புநேரம் -

சில மாதங்களாகவே நோய் அதிகமாகப் பரவிக்கொண்டிருந்த ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ஒரேயொரு நோய்த்தொற்றுச் சம்பவம் மட்டுமே பதிவாகியுள்ளது.

ஜூன் மாத ஆரம்பத்திலிருந்து ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான நோய்த்தொற்றுச் சம்பவங்கள் விக்டோரியாவின் மெல்பர்ன் நகரில் பதிவாயின.

மெல்பர்ன் நகரம் தற்போது மூன்றாம் மாதமாகக் கடுமையாக முடக்கப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு நாள்தோறும் 5 நோய்த்தொற்றுச் சம்பவங்களுக்குக் கீழ் பதிவானால் முடக்கத்தைத் தளர்த்துவதாக விக்டோரியா மாநில அதிகாரிகள் முன்பு கூறியிருந்தனர்.

இன்று, விக்டோரியாவின் 14 நாள்களுக்கான நோய்த்தொற்றுச் சம்பவங்களின் சராசரி எண்ணிக்கை 8.1.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்