Images
  • aussie
    (படம்: Lukas Coch/REUTERS)

மனநலப் பிரச்சினைகளைக் கொண்ட இளையர்களுக்கு ஆதரவு வழங்க 37 மில்லியன் டாலர் ஒதுக்கும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா, மனநலப் பிரச்சினைகளைக் கொண்ட இளையர்களுக்கு ஆதரவு வழங்கும் திட்டங்களுக்குக் கூடுதலாக 37 மில்லியன் டாலரை ஒதுக்கியுள்ளது.

பிரதமர் ஸ்காட் மோரிசன் இன்று அந்தத் தகவலை வெளியிட்டார்.

ஆஸ்திரேலியா முழுவதும் 100க்கும் அதிகமான மனநல நிலையங்களை நடத்திவரும் Headspace எனும் அரசாங்க அமைப்புக்கு அந்தத் தொகை வழங்கப்படும்.

ஆஸ்திரேலியாவில் சுமார் 560ஆயிரம் இளையர்கள் மனநலப் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக அரசாங்கப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

Top