Images
  • australia
    (படம்: REUTERS/Andrew Kelly/File Photo)

கிருமிப்பரவலைக் கட்டுக்குள் கொண்டுவரச் சிரமப்படும் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலம்

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில், இன்று 41 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

அது கிருமிப்பரவலைக் கட்டுக்குள் கொண்டுவருவதில், அதிகச் சிரமத்தை எதிர்நோக்குகிறது.

ஆஸ்திரேலியாவின் மற்ற பகுதிகளில் சமூக அளவிலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்.

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவோர் ஹோட்டல்களில் இரண்டு வாரங்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவது ஆஸ்திரேலியாவில் கட்டாயம்.

இருப்பினும் Victoria மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 30 விழுக்காட்டினர், தனிமைப்படுத்தல் முடிவடையும் நேரத்தில் கிருமித்தொற்றுச் சோதனை மேற்கொள்ள மறுப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறினர்.  

Top